அரியலூர் மாவட்ட தமிழ்நாடுடாஸ்மாக் விற்பனை யாளர் நல சங்கம் மாநில சிறப்பு தலைவர்கு.பாரதிஅறிவுறுத்தலின்படி,நல சங்கத்தின் அரியலூர் மாவட்ட செயலாளர் ஏ பி நடராஜன் தலைமையில் ,இரயில்வே கேட் கடை எண் 6403 முன்பு டாஸ்மாக் பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடையின் விற்பனையாளர்கள்,கருப்பு சட்டை,தங்களது சட்டையில் கருப்பு பேட்ஜ்,அணிந்து பணி புரிந்து வருவதை படத்தில் காணலாம்.இதே போல கல்லங் குறிச்சி ரோட்டிலுள்ள டாஸ்மாக் கடை முன்பு, மாநில தலைமையின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி,நல சங்கத்தின் மாவட்ட அமைப்புச் செயலாளர் மு கருணாநிதி தலைமையில், , விற்பனை யாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விற்பனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.