திருக்கணித பஞ்சாங்கப்படி கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி சனி பகவான் பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு அதி விசேஷமாக திண்டுக்கல்லில் கொண்டாடப்பட்ட சனி பெயர்ச்சி மஹா யாகம் திண்டுக்கல் மீனாட்சி மஹாலில் மதியம் 1.30 மணி அளவில் புலிப்பாணி வேத ஜோதிட பயிற்சி மையம் சார்பாக எட்டாவது முறையாக மஹா யாகம் நடத்தப்பட்டது.
வேள்வி திலகம் தெத்துப்பட்டி சதாசிவ குருக்கள் சிறப்பாக நடத்தி வைத்தார். பழுத்த ஜோதிட விற்பன்னர்கள் சின்னாளப்பட்டி.இராமசாமி ஐயா,ஜோதிடர் மருதமுத்து,சென்னை ஆக்கர்ஸனா,ஜோதிட கலைவாணி ஜெயலட்சுமி, கவிதா ஆகியோர் ஜோதிட பலன்களை அழகாக எடுத்துரைத்தனர்.
சிறப்பு அழைப்பாளர் ஸ்ரீ ஸ்வாமீ ஞான சிவானந்தா அவர்கள் மற்றும் மதுரை வராகி கோவில் தண்டபாணி சுவாமிகள் சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர்.மனோஜ்வர்மா சிறப்பாக செய்திருந்தார். அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்”ஞான சுடரொளி” ஸ்வாமி ஸ்ரீ சுந்தர ஞானாந்தா நாயனார்.