தமிழகத்தில் 12525 ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராம ஊராட்சிகளை ஊராட்சி செயலர்கள் நிர்வகிக்கின்றனர். தமிழகத்தில் 1300 ஊராட்சி செயலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்திருந்தார்.
காலியிடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இந்த பணிக்கான நியமனத்தை போட்டித்தேர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.10 ம் வகுப்பு தகுதியை மட்டுமே அடிப்படையாக கொண்ட தேர்வு என்பதால் ஏராளமானோர் தேர்வு எழுத வாய்ப்பை பெறுவர்.நேர்முகத்தேர்வு மூலம் பணி நியமனம் வழங்கினால் அரசியல் குறுக்கீடுகளால் ஏழை எளிய மாணவர்களுக்கு ஊராட்சி செயலர் பணி கிடைக்க வாய்ப்பு இருக்காது.எனவே ஊராட்சி செயலர் பணியை போட்டித்தேர்வு மூலம் நிரப்ப முன் வர வேண்டும் என ஆயக்குடி மரத்தடி மையம் சார்பில் வேண்டுகிறோம்.