பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகள் தற்போது பரங்கிபேட்டையில் தங்கி பயிற்சி பெறுகிறார்கள். இந்தக் குழு மாணவிகள் கடந்த சில தினங்களுக்கு முன் சிதம்பரத்தில் இயங்கும் “தமிழ் வேளாண்மை விலைப்பொருட்கள் & மதிப்பு கூட்டுப் பொருட்கள்” கடையை ஏப்ரல் 2 ந் தேதி நேரில் சென்று பார்வையிட்டனர்.
இங்கு அவர்கள் பல்வேறு வேளாண் உற்பத்திகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மதிப்பூட்டிய பொருட்கள் குறித்தும், அவற்றின் செயல்முறை, விற்பனை மற்றும் சந்தை நிலைமை குறித்தும் கடை நிர்வாகத்தினரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். இந்த பயணம் மாணவிகளுக்கு தொழில்நுட்ப அறிவையும், நடைமுறை அனுபவத்தையும் வழங்கியதாக மாணவிகள் தெரிவித்தனர்.
வேளாண் கற்றலில் நிலத்தோடு நேரடி தொடர்பு மற்றும் சந்தை ஆய்வின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த பார்வை பயணம் அமைந்ததாக பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் லிஷா , மாலினி , மேதினி , மேக்னா , நந்தினி , நிலோபர்நிஷா , நிரஞ்சனா , நிஷாலினி ஆகியோர்
தெரிவித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்