பிரபு தாராபுரம் செய்தியாளர்
செல்:9715328420
வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரியும்,
தமிழகம் வரும் பிரதமர் மோடியைக் கண்டித்தும் திருப்பூர் தெற்கு மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் தாராபுரம் காந்தி சிலை முன்பு கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரியும்,தமிழகம் வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் தாராபுரம் காந்தி சிலை முன்பு கருப்புகொடி ஏந்தி தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னால் காங்கிரஸ் எம்எல்ஏ காளிமுத்து முன்னிலை வகித்தார்.
இதில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழ்நாட்டையும், தமிழர்களையும் ஜனநாயக விரோதத் திட்டங்கள் மூலம் வஞ்சித்து வருகிறது.
இந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை,வக்ஃபு வாரிய திருத்த சட்டம்.
புயல், வெள்ளம் பாதித்த தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கு பேரிடர் நிதி ஒதுக்காதது, தமிழ்நாட்டிற்கு பள்ளிக்கல்விக்காக ஒதுக்கிய நிதியை வழங்காமல் இருப்பது,
நீட் தேர்வு விலக்கு அளிக்காதது,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை, மகாத்மா காந்தி பெயரில் இருப்பதால் இத்திட்டதை முடக்க நினைக்கின்றது.
தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ. 4,034 கோடியை தராமல் கிராமப்புற மக்களின் வாழ்வில் விளையாடுகிறது மத்திய அரசு எனக்கு தெரிவித்து. மத்திய பாஜக மோடி அரசை கண்டித்து காங்கிரஸ் கமிட்டியினர் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தாராபுரம்,உடுமலை, மடத்துக்குளம், மூலனூர்,குண்டடம் உள்ளிட்ட பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.