மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்

குத்தாலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 4ம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் 5ம் தேதி முதல் கால் யாகசால பூஜைகள் தொடங்கியது.
4ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹுதி மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கோவில் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அரங்காவலர் கண்ணன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.