துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் மின்சாரத் துறை அலுவலகத்தில் மின் நுகர்வோர்களின் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் மிக அவர்களின் குறைதீர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது இந்த வகையில் துறையூர் – முசிறி செல்லும் சாலையில் உள்ள வருவாய் பிரிவு – துறையூர் கோட்டம், அலுவலகத்தில் 05. 04 .2025 சனிக்கிழமை அன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.துறையூர் கோட்ட செயற்பொறியாளர் பொன் . ஆனந்தகுமார் தலைமையில்மின் நுகர்வோர் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.இதில்
துறையூர் பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து மின் கட்டண தொகை குறைபாடுகள்-1, மின் மீட்டர்கள் குறைபாடுகள்-2, குறைந்த மின்அழுத்த மீட்டர்-10, சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல்-6 உள்ளிட்ட மின் தொடர்பான 41 புகார்கள் பெறப்பட்டது.

இதில் ஒரு புகார் நிவர்த்தி செய்யப்பட்டது.மீதமுள்ள 40 புகார்கள் மீது பரிசீலனை செய்து விரைவில் தீர்வு காணப்படும் என மின்சார வாரிய அதிகாரி தெரிவித்தார். இந்த முகாமில் உதவி செய்ற் பொறியாளர்கள் வல்லவன் (வடக்கு),முல்லை (மேற்கு), முல்லை தெற்கு (பொ), உப்பிலியபுரம் செயற் பொறியாளர் சதீஷ்குமார், கொப்பம்பட்டி உதவி செயற் பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் உதவி மின் பொறியாளர்கள் மற்றும் வருவாய் பிரிவு அலுவலர்கள், மின் நுகர்வோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இந்த மின் நுகர்வோர் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் ,பொதுமக்கள் மின் சம்பந்தமான புகார்களை தெரிவித்து விரைந்து தீர்வு காண்பதற்கு வசதியாக இருந்ததாக பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர்கள் தெரிவித்தனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *