தஞ்சாவூர் மாவட்டம் பதிவு எண் 27/ 2024 தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சார்பில் பேராவூரணி ஒன்றியம் வ.கொள்ளைக்காடு
ஓ. கருப்பையன் எலக்ட்ரிகல் கடை கட்டிடத்தில் மாதாந்திரம் கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநில பொருளாளர் வி.எஸ்.வீரப்பன் தலைமை தாங்கினார் பேராவூரணி ஒன்றிய தலைவர் எம்.ஐயப்பன், செயலாளர் எஸ். கோவிந்தசாமி, பொருளாளர் ஓ. கருப்பையன்,திருவோணம் நகர செயலாளர் மற்றும் முன்னாள் காவல்துறை துணை ஆய்வாளர் பெரி. சௌந்தரராஜன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் . கே.பன்னீர்செல்வம், ஆர்.சாமிநாதன் ,எம். நாடிமுத்து ,
கே.செல்வராஜ்,பி.பாலகிருஷ்ணன்,கே.நாடிமுத்து ,சி.பெரியசாமி
மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தொடர்ந்து புதிதாக சங்கத்தின் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அட்டை பதிவு செய்து வழங்கப்பட்டது பேராவூரணி ஒன்றியத்தில் இருந்து மாநில நிர்வாகம் கமிட்டி புதிய உறுப்பினராக மூன்று நபர்களும், மாவட்ட பொறுப்புக்காக ஒரு நபரும் , இரண்டு ரோடு சம்பந்தமாக தீர்மான நிறைவேற்றப்பட்டது.