நாட்டில் சொத்துக்களை கொண்டுள்ள நிறுவனங்களில் மூன்றாவதாக உள்ள வக்ஃபு வாரியத்தில் தற்போது மத்திய அரசு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது..
கடந்த பத்து ஆண்டுகளில் பல்வேறு நில அபகரிப்பு பிரச்சனைகளில் சம்பந்தப்பட்ட வக்பு வாரியத்தில் தற்போது திருத்த மசோதாவால் தற்போது இஸ்லாமிய பெண்களுக்கும் வக்பு வாரியத்தில் உறுப்பினராகலாம் மற்றும் தகுதியுள்ள மாற்று மதத்தினரும் பொறுப்புகள் வகிக்கலாம் என்ற திருத்தங்களும் வரவேற்கக்கூடியவை..மேலும் வக்பு வாரியத்தின் வரவு செலவு கணக்குகளை அரசிற்கு தெரிவிக்க வேண்டும் என்ற திருத்தத்தின் மூலம் வெளிப்படைத்தன்மை யும் பிரச்சனைகளை நீதிமன்றம் மூலம் தீர்வு காணும் வாய்ப்பும் அமைந்துள்ளதால் இந்த திருத்த மசோதா பல தரப்பினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது..
மேலும் வக்பு சொத்து என்ற பெயரில் நடக்கும் மோசடிகளையும் பின்புலம் உள்ள மோசடி கும்பல்களுக்கும் சாவுமணியாக அமைந்துள்ளது..இந்த ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மசோதாவை நிறைவேற்றி பலதரப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் மத்திய அரசிற்கு ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவையின் நன்றி கலந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்..
நா.ஜெகன்நாதன்
நிறுவனர் தலைவர்
ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவை