சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவ மாணவிகள் சேர்க்கை மற்றும் திருவொற்றியூர் என் ஜி ஓசார்பில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது

திருவொற்றியூர் மாநகராட்சி 1வது மண்டல குழு தலைவர், கிழக்கு பகுதி செயலாளர் திரு.தி.மு.தனியரசு தலைமையில்.

திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல அலுவலர் விஜய் பாபு DRO மற்றும் செயற் பொறியாளர் திரு.பாபு ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்.
சுனாமி குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி என் ஜி ஓ சார்பில் பொதுமக்கள் விழிப்புணர்வு எற்ப்படுத்தும் வகையில், நடைபெற்ற கூட்டத்தில்,மாணவ மாணவிகளின் அசத்தலான கலை நிகழ்ச்சிகள் மற்றும் பெற்றோர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடகம் அரசு பள்ளியில் மாணவ மாணவிகளை மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் சேர்த்தால் அதில் விளையும் நன்மைகள் மற்றும் உயர்கல்வி பயில்வதற்கான அறிவுரைகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அப்பகுதி பொதுமக்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மாநகராட்சி மண்டல குழு தலைவர் திரு.தி.மு.தனியரசு மண்டல அலுவலர் திரு.விஜய் பாபு ஆகியோர் கலந்து கொண்டு அப்பகுதி பொதுமக்களிடம்
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவ மாணவிகளை சேர்வதால் அதில் உள்ள முக்கியத்துவத்தை குறித்தும் அரசின் திட்டங்கள் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் மாணவ மாணவிகளை பற்றியும் எடுத்துக்காட்டி சிறப்புரை யாற்றினார்கள்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் நமச்சிவாயம், இளநிலை பொறியாளர் தீன தயாளன், மின்சாரத்துறை இளநிலை பொறியாளர் சரவணன் மற்றும் என் ஜி ஓ நிறுவனத்தின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *