ஆகாஷ் நிறுவனம் சார்பாக ஜே.இ.இ.தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆகாஷ் இன்விக்டஸ் எனும் புதிய பாடத்திட்டம் கோவையில் அறிமுகம்
இந்தியாவின் முன்னணி தேர்வு தயாரிப்பு நிறுவனமான ஆகாஷ் எஜுகேஷனல் நிறுவனம் இந்தியாவில் பொறியியல் மாணவர்களுக்கான முதன்மை தேர்வான ஜே.இ.இ.தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் படுத்தும் விதமாக இன்விக்டஸ் எனும் முன்னோடி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது..
இதற்கான அறிமுக விழா கோவை அவினாசி சாலையில் உள்ள ஆகாஷ் பயிற்சி மையத்தில் நடைபெற்றது…
இதில் , ஆகாஷ் எட்யூகேஷனல் சர்வீசஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி,தீபக் மேஹ்ரோத்ரா, புதிய இன்விக்டஸ் பாடத்திட்டத்தை அறிமுகம் செய்து வைத்து பேசினார்…
அப்போது பேசிய அவர்,
இந்தியாவின் மற்றும் வெளிநாட்டு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை இலக்காகக் கொண்ட உயர்தர பொறியியல் விருப்பமுள்ள மாணவர்களுக்காக இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்…
நாடுதழுவிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட சிறந்த JEE ஆசிரியர்கள் இணைந்து, மிகச் சிறந்த வழிகாட்டுதல்களை ஆகாஷ் பயிற்சி மைய மாணவர்களுக்கு வழங்க உள்ளதாக கூறிய அவர், ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் உயர்ந்த ரேங்குகளை அடைய விரும்பும் மாணவர்களுக்காக இத்திட்டம் மிகவும் நவீனமாகவும் துல்லியமாகவும் வடிமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்…
ஆகாஷ் இன்விக்டஸ் இந்தியாவின் 40க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்படுத்தபட உள்ளது குறிப்பிடதக்கது…
மேலும் தகவலுக்கு, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் 7303759494 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் என ஆகாஷ் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்…