மயிலாடுதுறை செய்தியாளர்
இரா.மோகன்
வக்ஃப் சட்டத்துக்கு எதிராக மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பள்ளிவாசல் முன்பு இஸ்லாமியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து தொழுகைக்குப் பின்னர் கண்டன முழக்கம்.
வக்ஃப் திருத்த சட்டம் கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து பள்ளிவாசல்களின் முன்பும் ஜூம்ஆ தொழுகைக்குப் பின்னர் இஸ்லாமியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து கண்டன முழக்கம் எழுப்பினர்.
மயிலாடுதுறை பெரிய தைக்கால் தெருவில் உள்ள பள்ளிவாசல் முன்பு கை கால் பள்ளிவாசல் ஜமாத்தின் தலைவர் அப்துல் அஜீஸ் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகையை முடித்த பின்னர் பள்ளிவாசல் முன்பு நின்று வக்ப் சட்ட திருத்தத்திற்கு எதிராகவும் மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதே போல் வானதி ராஜபுரம் திருமங்கலம் வடகரை கிளியனூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதி பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்