தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் 2025 2026 ஆம் கல்வியாண்டிற்கான விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி தேனி மாவட்டம் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 2025.2026 ஆம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான கல்லூரி விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி தேனிமேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியின் பாடப்பிரிவுகளான சிவில் இன்ஜினியரிங் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் போன்ற பாடப் பிரிவுகளுக்கான மாணவ மாணவியர் சேர்க்கை விண்ணப்ப படிவங்களை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவரும் நாடார் சரஸ்வதி கல்வி குழுமத்தின் தலைவருமான கல்வி தந்தை டி ராஜமோகன் உப தலைவர் பி பி கணேஷ் பொதுச் செயலாளர் எம்.எம் ஆனந்த வேல் பொருளாளர் எம் பழனியப்பன் மற்றும் நாடார் சரஸ்வதி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் செயலாளர்கள் ஏ ராஜ்குமார் ஏ எஸ் ஆர் மகேஸ்வரன் கல்லூரியின் இணைச் செயலாளர் எஸ் நவீன் ராம் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சி மதளை சுந்தரம் துணை முதல்வர்கள் டாக்டர் என் மாதவன் டாக்டர் எம் சத்யா வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் சி கார்த்திகேயன் ஆகியோர் மாணவ மாணவியர்களுக்கு விண்ணப்ப படிவங்களை வழங்கி சிறப்பித்தனர் நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 2025 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவ மாணவியர் சேர்க்கைக்கான கல்லூரி விண்ணப்ப படிவங்கள் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை அலுவலகம் தேனி நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இடமால் தெரு நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள நேரடி சேர்க்கை மையங்களில் வழங்கப்படுகிறது என்றும் மாணவ மாணவியர்கள் விண்ணப்ப படிவுகளை வாங்கி பயனடைய வேண்டும் என்று கல்லூரியின் கல்வித் தந்தை டி ராஜ மோகன் தெரிவித்தார்