2021 தேர்தலில் 65 இடங்களை பிடித்து தோல்வியை தழுவிய பா.ஜ.க.அ.தி.மு.க.கூட்டணி வரும் தேர்தலில் முப்பது இடங்களை கூட பிடிக்காது
பா.ஜ.க, அ.தி.மு.க எந்த கொள்கையும் இல்லாத கூட்டணி எனவும் அ.தி.மு.க.வை மிரட்டி பணிய வைத்திருப்பது தெளிவாக தெரிவதாக பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரஃபி கோவையில் விமர்சனம்
கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள மக்கா மஸ்ஜித் மதரசாவில் பயிலும் மாணவ,மாணவிகளை ஊக்கபடுத்தும் விதமாக மிதிவண்டிகளை தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ,மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது ரஃபி வழங்கினார்..
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க, அ.தி.மு.க எந்த கொள்கையும் இல்லாத கூட்டணி எனவும் அ.தி.மு.க.வை மிரட்டி பணிய வைத்திருப்பது தெளிவாக தெரிவத்தார்..
கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை இரு கட்சிகளும் விமர்சனம் செய்து வந்த நிலையில் தற்போது இணைந்து தேர்தலை சந்திப்பதாக அறிவித்துள்ளது 2026 தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை தழுவும் என விமர்சித்தார்..
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தமிழ்நாடு மக்கள் விரோத நடவடிக்கைகளை, உச்ச நீதிமன்றமே வெளிப்படையாக கண்டித்து இருப்பது,
இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய செயல் என கூறிய அவர்,
தமிழ்நாடு முதல்வர், ஸ்டாலின் சட்ட பூர்வமாக நடத்திய இயக்கத்தில் வெற்றி பெற்று இருப்பதாக கூறினார்…