ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே மண்டல மாணிக்கம் கிராமத்தில்,
500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சில பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக குடி தண்ணீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
