மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னனியின் நிர்வாகிகள் நியமனம் அக்கட்சியின் தலைவர் வைகோ தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது இதில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னனியின் மாநில செயலாளர்களாக 12 பேர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவித்தனர்
இதில் வால்பாறை திராவிட தோட்டத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் எஸ்.கல்யாணியை மாநில செயலாளராக தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளனர் இதனையடுத்து அக்கட்சியின் தலைவர் வைகோ, முதன்மை செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரைவைகோ மற்றும் நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்
இந்நிகழ்ச்சியின் போது வால்பாறை பொதுச்செயலாளர் க.பெருமாள், துணைப் பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் பாலசுப்பிரமணியம், செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி மற்றும் பலர் உடனிருந்தனர்