
திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் ஒன்றியம், கண்டவராட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் வீ.கவிதா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ச.அனிதா, ஓய்வு பெற்ற ஆசிரியர் நடராஜன், அரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் ப.சக்கரவர்த்தி வரவேற்றார். பள்ளி எஸ்எம்சி ஆசிரியை ரா.தேன்மொழி, வீ.கவிதா, ச.அனிதா, எல்கேஜி ஆசிரியை ரேவதி, பொறுப்பு தலைமை ஆசிரியர் ஆகியோர் குத்து விளக்கேற்றினர். பள்ளி ஆண்டு அறிக்கையை இடைநிலை ஆசிரியர் வெ.துரைராஜன் வாசித்தார். மேலும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி (கோபி) முன்னாள் மாணவர்கள் பிரபாகரன் , சந்தான பாரதி, ரவிச்சந்திரன், ஆர்த்தி மற்றும் பெற்றோர்கள் திரு.முரளி,( கிஷோர் ), வீரமணி ஆகியோர் மாணவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்கள்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கிழங்குணம் பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) பெ.சரவணன், ஓய்வு பெற்ற ஆசிரியர் மு.தீர்த்தமலை மற்றும் பெற்றோர் குணசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். ஊடகவியலாளர் வினோத் குமார், பள்ளி அனைத்து நிலை பணியாளர்களும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியில் பள்ளி கணிதப் பட்டதாரி ஆசிரியர் சீ.முரளி நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.