தமிழகத்தில் கோடை வெயில் காலத்தில் ஏழை எளிய பொதுமக்கள் பயனடையும் வகையில்,தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிவித்திருந்ததையடுத்து ஆங்காங்கே தண்ணீர் பந்தல்களை தவெகவினர் திறந்து வருகின்றனர்.

அந்தவகையில்,தமிழக வெற்றிக் கழகம் வாலாஜாபாத் பேரூராட்சி சார்பில் வாலாஜாபாத் பேருந்து நிலையில் அருகில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழாவானது இன்று நடைபெற்றது.

கோடை வெயிலின் தாகத்தை தீர்க்கும் வகையிலும்,உடலுக்கு குளிர்ச்சியூட்டும் வகையிலும் நீர்,மோர்,லெமன் ஜூஸ் உள்ளிட்ட குளிர்பானங்கள், வெள்ளரிப்பழம், தர்பூசணி,கீரைக்காய் உள்ளிட்ட பழ வகைகளுடன் குவிக்கப்பட்டடிருந்த தண்ணீர் பந்திலை, மாவட்ட செயலாளர் SPK தென்னரசு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து,பொது மக்களுக்கு நீர்,மோர், குளிர்பானங்கள், பழ வகைகளை வழங்கினார்.

இந்நிலையில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சில மணி துளிகளிலேயே பொது மக்கள் ஒருவருக்கொருவர் முந்தியடித்துக்கொண்டும்,போட்டி போட்டுக்கொண்டும், அனைத்தையும் ஏராளமான பொதுமக்கள் தங்களது கைகளில் அள்ளிக்கொண்டு எடுத்துச் சென்றதால் தண்ணீர் பந்தலில் அனைத்தும் காலியாகின.

குறிப்பாக கோடைகாலங்களில் பொது மக்களுக்கு தாகம் தீர்க்கும் சீசன் பழமான
தர்பூசணி பழத்தில் கலர் செறிவூட்ட செய்ய மருந்து மற்றும் ஊசி பயன்படுத்துவதாக சர்ச்சை எழுந்த நிலையில்,தர்பூசணி பழம் பெரிதும் விற்பனையாகாமல் பாதிப்படைந்துள்ள
விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்கும் விதமாக,அவர்களுக்கு ஆதரவாக தவெகவின் இந்த தண்ணீர் பந்தல் நிகழ்ச்சியில் தர்பூசணி குறித்த சர்ச்சையை போக்கும் விதமாக விவசாயிகளிடம் இருந்து நேரடியாக 3டன் தர்பூசணி பழங்களை பெற்று,
மினி லாரி மூலம் கொண்டு வந்து,பொது மக்களுக்கு இலவசமாக தவெகவினர் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் வாலாஜாபாத் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் வெண்குடி D.ராகுல்,தவெக நிர்வாகிகள்
M.யோகநாத்,VSG சத்தியா,S.அருண்ராஜ்,
V.தியாகராஜன்,R.நாகராஜ்,G.அரவிந்த்,
N.வெங்கடேசன்,M.சாதிக் பாஷா, B.கோபிநாத்,A.தரணிபாபு,S.ராபர்ட்,
S.குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *