திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் 134 ஆவது பிறந்த நாள் விழா உரையரங்கம் மைய வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் தலைமை தாங்கினார். கவிஞர் பூங்குயில் சிவக்குமார், வழக்கறிஞர் சா.இரா.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓவிய ஆசிரியர் பெ.பார்த்திபன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.அப்பாண்டராஜன் பங்கேற்று சட்ட மேதை அம்பேத்கர் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் ஓய்வுபெற்ற வட்டாட்சியரும், இராணுவ வீரருமான வ.முருகானந்தம் அவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வில் நூலகர் ஜா. தமீம், கேப்டன் பிரபாகரன் ஆகியோர் கவிதை வாசித்தனர். அண்ணல் அம்பேத்கர் என்ற தலைப்பில் பேராசிரியர் தென்னாங்கூர் ரஜினி பாடல்களை பாடினார். மேலும் நிகழ்ச்சியில் ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் ஜி.விநாயக மூர்த்தி, எய்டு இந்தியா திட்ட மேலாளர் க.முருகன், ஆசிரியர் மாவீரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். டாக்டர் அம்பேத்கர் விருது பெற்ற வ.முருகானந்தம் ஏற்புரை நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் பள்ளி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் பங்கேற்றனர். இறுதியில் ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் அ.ஷாகுல் அமீது நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.