தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி என்.ஆர்.டி. திருமண மண்டபத்தில் அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாளையொட்டி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் 1495 பயனாளிகளுக்கு 10.36 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை பெரிய குளும் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் ஆண்டிபட்டி எம்எல்ஏ ஆ. மகாராஜன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்கள்
இந்த நிகழ்வில் நகர் மன்ற தலைவர்கள் தேனி ரேணுப் பிரியா பாலமுருகன் பெரியகுளம் சுமிதா சிவக்குமார் போடிநாயக்கனூர் ராஜராஜேஸ்வரி சங்கர் திட்டக்குழு உறுப்பினர் எம். சி நாராயணபாண்டியன் பேரூராட்சி மன்ற தலைவர்கள் பூதிப்புரம் கவியரசு பால்பாண்டியன் தாமரைக் குளம் ச. பால்பாண்டி தென்கரை வி. நாகராஜ் வடுகபட்டி நடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இரா நல்லதம்பி மிகச் சிறப்பாக செய்திருந்தார்