கரூர் செய்தியாளர் மரியான் பாபு

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடிய
தோழர்களம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்த நாள் விழாவில் அண்ணல் அம்பேத்கர் முழு உருவ சிலை கரூரில் அமைக்க தீர்மானம் நிறைவேற்றபட்டது.
தோழர்களம் சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்ட மாமேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134 – வது பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கரூர் மாவட்ட அமைப்பாளர். சிலம்பம் கொ. சரவணன் தலைமை தாங்கினார்.மாநில அவைத்தலைவர் தோழர். இரா. ராஜகோபால் மேற்கு மண்டல பொறுப்பாளர் தோ. அ. நிஜாமுதீன், கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர்.ரெ. திராவிட சரவணன், மாஸ்டர்.ஏ.கே. நிசோக் ராஜா. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் தி. திவ்யா வரவேற்புரையாற்றினார். தோழர்களம் நிறுவனர் & தலைவர் . தி. க. சண்முகம், தலைமை நிலையச் செயலாளர் தமிழன் சு. கவின்குமார், மேற்கு மண்டல பொறுப்பாளர் வீரா. கோபி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை பொருப்பாளர், தோழர்களம் கிராமிய கலைக்குழு சிலம்ப மாணவ, மாணவியர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிலம்பாட்டம் கலை மூலமாக அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தினார்கள் இறுதியாக ரா. ஹரி பகத் நன்றி கூறினார்.
மேலும் இந்நிகழ்வில் இறுதியில் , சட்ட மாமேதை டாக்டர். அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு கரூரில் முழு உருவச்சிலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தோழர் களம் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.