கரூர் செய்தியாளர் மரியான் பாபு
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்..திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட தி.மு.க சார்பில், கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள், 157 ஊராட்சிகள், 3 நகராட்சிகளில் 21 வார்டுகள், 8 பேரூராட்சிகளில் 24 இடங்கள் என மொத்தம் 250 இடங்களில் விளையாட்டு திருவிழா நடைபெற்றது.
முதல் பரிசு பெற்றவர்களுக்கு, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் மாவட்ட திமுக செயலாளர், அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் கிருஷ்ணாராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, குளித்தலை, எம்எல்ஏ மாணிக்கம், அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, மாநகராட்சி மேயர் , துணை மேயர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.