கே . தாமோதரன் பல்லடம் செய்தியாளர்
செல்: 9842427520.

பல்லடம் அடுத்த சுல்தான் பேட்டை அருகே வலசு பாளையம் பகுதியில் வட மாநில தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்து….
20 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கி அனுமதி…..
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சுல்தான் பேட்டை பகுதியில் பழனிஆண்டவர் என்ற நார் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு 20க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டுடிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
அருகில் இருந்தவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.