பாபநாசம் செய்தியாளர் ஆர் .தீனதயாளன்
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் இயற்கையாக அமைந்துள்ள மணல் திட்டினை தனிநபர் அள்ளுவதற்கு அனுமதி வழங்கிய அரசாணையை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் கோரிக்கை மனு…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருவைக்காவூரில் உள்ள இடக்கொடி கிராமத்தில் இயற்கையாக அமைந்துள்ள மணல் திட்டினை தனிநபர் அள்ளுவதற்கு அனுமதி வழங்கிய அரசாணையை ரத்து செய்ய பாபநாசம் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கும் நிகழ்ச்சி தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு உறுப்பினர் தேவனோடை சுரேஷ் தலைமையில் நடைபெற்றது .
இதில் தமிழக வெற்றி கழகத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் நிஜாம்,தவெக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜா ,வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ராம்குமார், திமுக நிர்வாகி ராமன்,சரபோஜி, முருகானந்தம்,பாஜக வடக்கு ஒன்றிய தலைவர் சுமதி, வழக்கறிஞர் அறிவழகன் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அளித்தனர்.