கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்: 9842427520.
மளிகை கடையில் பொருள்கள் வாங்குவது போல கணவன் மனைவி செல்போனை திருடும் சி சி டிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு…….
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கொடுவாய் பகுதியில் சிவம் மக்கள் சந்தை என்ற கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு வந்த தம்பதியர் கடையில் பொருள் வாங்குவது போல பாசாங்கு செய்தனர். மேலும் அந்த கடையில் வேலை செய்யும் ஊழியரின் செல்போனை லாபகமாக திருடி சென்றனர்.
தொடர்ந்து அந்த ஊழியர் அங்கு வந்து பார்த்த போது அவரது செல்போன் காணாமல் போனது தெரிய வந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் போலீஸ் சார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கணவன் மனைவி செல்போனை லாபகமாக திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.