தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் அருகே தாராபுரத்தில் பிரியாணி கடை அதிபரிடம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என கூறி பணம் பறிக்க போனில் மிரட்டல் விடுத்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் – பரபரப்பு.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஜாபர் சாதிக் என்பவர் பேருந்து நிலையம் அருகில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.
இவருக்கு கடந்த 15 ஆம் தேதி போனில் தொடர்பு கொண்ட நபர் தன்னை உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என தெரிவித்து கூறிக்கொண்டு உங்களது கடை மீது ஏராளமான புகார்கள் வருகிறது கடையில் வேலை பார்க்கக்கூடிய தொழிலாளிக்கு வேலை நேரத்தின் போது ஹெட் கேப் வழங்குவதில்லை,சுகாதாரமற்ற முறையில் உள்ளது
இன்னும் 20 நிமிடத்தில் நிருபர்களுடன் வந்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் கடையை பூட்டி சீல் வைக்க உள்ளதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார், போனில் பேசிய நபர் போலியான அரசு அதிகாரி என உணர்ந்த உடன் அவருடன் கூடுதலாக போனில் பேசிய போது கடை அதிபருடன் என்னைய கேள்வி கேட்டால் அது வேற லெவலில் சென்று விடும் என்றும் நோட்டீஸ் வழங்கப்படும் என்னை அலுவலகத்திற்கு வந்து பாருங்கள் என்றும் அதிகார தோரணையில் கூறும் போலி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ,பலமுறை நான் போன் செய்தும் போனை எடுக்க வில்லை ,ஆய்வின்போது தங்களுக்கு பாதிப்பு வராத வகையில் செய்ய வேண்டும் இந்த ஒரு முறை செய்து தருகிறேன்,உங்ககிட்ட பேசிட்டு இருக்க நேரத்துல ஜீப் எடுத்துட்டு அங்க வரதுக்கு எவ்வளவு நேரம் ஆகும் ,இதுபோன்று எந்த அலுவலரும் தகவல் தெரிவிக்க மாட்டார்கள்,உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என ஹோட்டல் அதிபர் நைசாக கேட்கும் போது அதை நீங்களே ஒபன் சொல்லுங்கள் என போலி அதிகாரி கேட்பதும் , லஞ்சமாக 5000 ரூபாய் தருகிறேன் என்று கடைக்காரர் கூறும் போது நான் எதையும் எதிர்பார்க்கவில்லை என்று கூறுகிறார்,
இந்த ஒரு முறை மட்டும் உங்களை மன்னித்து விடுகிறேன் அதற்கு கவனியுங்கள் என கூறுகிறார்,அதற்கு 5000 ரூபாய்க்கு முடியாது என்றும் தனது கடை சின்ன கடையென கூறியதை தொடர்ந்து 7000 ரூபாய் அனுப்பி தாருங்கள் என ஜிபி நம்பரை தெரிவிக்கிறார்
போலி அதிகாரி, நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என நைசாக பேசி உடனடியாக அனுப்பி விடுகிறேன் எனக் கூறி அவர் கூறிய ஜி பே நம்பருக்கு முதலில் ஒரு ரூபாயை அனுப்பிவிட்டேன்,மீதி பணத்தை அனுப்பவில்லை ,இதுபோன்று தொழிலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பணம் பறிக்கும் நோக்கில் மிரட்டல் விடுத்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பிரியாணி கடை அதிபர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இதனிடையே அவர் தெரிவித்த ஜி பே நம்பர் வைத்து போலீசார் விசாரித்ததில்,அந்த எண் சென்னையில் உள்ள ஒரு மொபைல் கடை உரிமையாளருக்கு சொந்தமான எண் என்றும் அவரது நண்பர் என்றும் தெரியவந்தது,
இதுகுறித்து தாராபுரம் போலீசார் நடத்திய விசாரணையில் போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியவர் ராஜ்குமார் என்பதும்
அவர் சென்னையில் உள்ள செல்போன் கடையில் உள்ளவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அங்கு அடிக்கடி வந்து செல்வதும் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
இது போன்ற மிரட்டல் விடுக்கும் போலி அதிகாரிகளை போலீசார் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த பிரியாணி கடை அதிபர் ஜாபர் சாதிக் தெரிவித்தார்.