காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட திருநள்ளாறு ரோட்டில் அமைந்துள்ள புதுக்குளத்தை புதுப்பித்து சீரமைக்க காரைக்கால் நகராட்சி AMRUT 2.0 திட்டத்தின் கீழ் ரூபாய் 94-இலட்சம் மதிப்பீட்டிலான பணிகளையும் மற்றும் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட தருமபுரம் பச்சூர் வடக்கு பேட் பகுதியில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தை புனரமைக்க பொதுப்பணித்துறை மூலமாக ரூபாய் 10-இலட்சம் திட்ட மதிப்பீட்டில் பணிகளையும் A.M.H.நாஜிம், MLA துவங்கி வைத்தார்கள்…
இந்த நிகழ்வில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் திரு வேலுச்சாமி, காரைக்கால் நகராட்சி நிர்வாகம் பொறியாளர் திரு .முத்துசிவம், உதவி பொறியாளர் திரு. லோகநாதன், இளநிலை பொறியாளர் திரு. சத்தியபாலன் மற்றும் அப்பகுதி முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்..!