தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420

தந்தை இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில்  பேருந்தில் மயக்கம் போட்ட நடத்துனர் 

தாராபுரம்
 

தாராபுரத்தில் இன்று காலை சுமார் 10 .10 மணி அளவில் மதுரையிலிருந்து கோவை நோக்கி வந்த பேருந்து தாராபுரம் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விட நின்றது அப்போது திண்டுக்கல் என் எஸ் நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் அவருடைய தந்தை இறந்ததாக வெங்கடேசுக்கு அலைபேசியில் தகவல் வந்ததை அடுத்து நின்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென படிக்கட்டில் இருந்து கீழே மயங்கி விழுந்தார்

இதனால் தாராபுரம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் அருகில் இருந்த பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் பயணிகள்  மற்றும் பொதுமக்கள் பலரும் சேர்ந்து அவருக்கு முகத்தில் தண்ணீர் தெளித்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் க்கு போன் செய்து அவரை மீட்டு தாராபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் அந்த மதுரை டெப்போவை சேர்ந்த பேருந்தில் வந்த பயணிகளை அடுத்த பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர் அதனால்  பேருந்து நிலையத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *