திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்,
திருவாரூரில் தர்மபுர ஆதினத்திற்கு சொந்தமான மடத்தில் ரூபாய் 88 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு திருவாரூர் நகர போலீசார் பாபநாசம் பகுதியை சேர்ந்த குற்றவாளியை பிடித்து விசாரணை.
திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான ராஜாங்கட்டளை மடம் உள்ளது இங்கு நள்ளிரவு மடத்தின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே இருந்த ரூபாய் 88 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு போனது.
இது குறித்து மடத்தின் கண்காணிப்பாளராக உள்ள அருள் என்பவர் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருட்டு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். மடத்தின் பின்பக்கம் உள்ள காலி மைதானத்தில் தேர் திருவிழாவிற்காக அமைத்திருந்த ராட்டினம் அமைக்கும் தொழிலாளர்கள் மத்தியில் இரண்டு நாட்களாக படுத்திருந்த பாபநாசம் பகுதியைச் சேர்ந்த ஜெகபர் சாதிக் 35 என்பது தெரிய வந்தது உடனடியாக அவரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.