உச்சிப்புளியில் நேதாஜி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கண் சிகிச்சை முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம், P, R, முனிஸ் அறக்கட்டளை, அகில இந்திய மறவர் அறக்கட்டளை, அகில இந்திய ஃபெடரல் பிளாக் கட்சி, மற்றும் உச்சிப்புளி PM கிளினிக், முருகன் வைத்தியசாலை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, Help Age இந்தியா ஆகியவை இணைந்து மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை இராமநாதபுரம் மன்னர் நாகேந்திர சேதுபதி அவர்கள் துவங்கி வைத்தார். இதில் சுதேஷ் தேவன், கார்மேகம், மூர்த்தி மற்றும் இயக்கம், அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த முகாம் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. உச்சிப்புளி சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான கண் பரிசோதனைகளை செய்தனர், மற்றும் மருந்து, மாத்திரைகளை இலவசமாக வாங்கிச்சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *