பா வடிவேல் அரியலூர் மாவட்ட செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மிக அருகாமையில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்பதே கோரிக்கையாக, நீல புலிகள் இயக்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் ஹரிஹரன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் இயக்கத் தலைவர் டி. எம். புரட்சிமணி கலந்து கொண்டு, “மாணவர்களின் எதிர்காலம் மற்றும் சமுதாய ஒழுக்கம் பாதிக்கப்படக் கூடாது. பள்ளி வளாகத்திற்கு அருகாமையில் மதுபானக் கடை இயங்குவது ஆபத்தானது. குழந்தைகள் தவறான பாதையில் செல்ல வாய்ப்பு உள்ளது” எனக் கண்டனப் பேருரை ஆற்றினார்.
மேலும், பள்ளி மாணவர்களின் நலனை பாதுகாப்பதற்கும், அப்பகுதி குடிமக்களின் வாழ்வாதாரத்தையும் சமாதானமாக வைத்திருக்கவும், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த உண்ணாவிரதத்தில் இயக்கத்தின் பொருளாளர் பழனிச்சாமி, அஜித் நவீன் குமார், அஜய், ரஞ்சித், முருகபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்தால் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.