கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்: 9842427520.
ஆழ்துளை கிணற்றை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகபாளையம் புதூர் பஞ்சாயத்துக்குட்பட்ட பொள்ளாச்சி சாலை நா சுகம் பாளையம் பிரிவு பகுதியில் உள்ள சுமார் 30 ஆண்டுகளாக ஆழ்துளை கிணறு உள்ளது.
அப்பகுதியின் நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஆழ்துளை கிணற்றை தற்போது சாலை விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலை துறையினரால் அளவீடு செய்யப்பட்டு கல் நடப்பட்டுள்ளது. இந்த அளவீட்டுக்குள்ளாக ஆழ்துளை கிணறு இருப்பதால் அதனை மூடும் நடவடிக்கையில் நெடுஞ்சாலை துறை ஈடுபடாமல் ஆழ்துளை கிணறை பாதுகாத்து சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் வடுகபாளையம் புதூர் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.