ராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழகத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கீழ்த்தரமான முறையில் ஆபாசமாக பேசிய திமுக அரசின் அமைச்சர் பொன்முடியயை கண்டித்தும், இராமநாதபுரம் நகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட கழக செயலாளர் எம்,எ, முனியசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநில மகளிர் அணி நிர்வாகி கீர்த்திகா முனியசாமி, மாநில எம்ஜிஆர் மன்ற நிர்வாகி சுந்தரபாண்டியன், முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, மண்டபம் ஒன்றிய செயலாளர் மருதுபாண்டியன், மற்றும் கவிதா சசிக்குமார், மண்டபம் முனியசாமி, முதுகுளத்தூர் நகர் துணைச்செயலாளர் குருசாமி மற்றும் மாநிலம், ஒன்றியம், நகரம், நிர்வாகிகள், சார்பு அணியினர், மகளிர் அணி நிர்வாகிகள், ஏராளமானோர் கருப்புச்சட்டை அணிந்து கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.