திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி அலுவலகத்தில் தமிழக அரசு உத்தரவின் பேரில் தமிழில் விளம்பர பலகை வைப்பது தொடர்பாக வர்த்தக சங்க நிர்வாகிகளிடம் ஆலோசனை கூட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் சி .சரவணன் தலைமையில் நடைபெற்றது.

பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், துணைத் தலைவர் க. தனித்தமிழ் மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வலங்கைமான் பேரூர் திமுக செயலாளரும், வர்த்தக சங்க நிர்வாகக் குழு உறுப்பினருமான பா. சிவநேசன், வர்த்தக சங்க தலைவர் கே. குணசேகரன், செயலாளர் ராயல் ஜி.திருநாவுக்கரசு, பொருளாளர் எஸ்.புகழேந்தி, துணைத் தலைவர்என்.மாரிமுத்து,இணைச் செயலாளர்கள் எஸ்.சிவசங்கர், ஒய். யாகூப் சலீம் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் செயல் அலுவலர் சி. சரவணன் பேசுகையில்:-
வியாபாரிகள் தங்கள் நிறுவனங்களின் விளம்பர பலகைகளில் தங்கள் நிறுவனத்தின் பெயர்களை தமிழில் பெரியதாக எழுதி முதலில் இடம் பெற வேண்டும். வேறு மொழி பயன்படுத்த வேண்டுமென்றால் அவப்பெயர் பலகைக்குள்ளேயே ஆங்கில பெயர் இரண்டாவதாகவும், மூன்றாவதாக அவரவர் விரும்பும் மொழியும் இடம் பெற்றிருக்க வேண்டும்.

இதில் தமிழ் மொழிக்கான இடம், ஆங்கில மொழிக்கான இடம் மற்றும் பிற மொழிக்கான இடமானது 5,3,2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். பிறமொழி எழுத்துக்களை விட தமிழ் எழுத்துக்கள் முதலிடத்தில் பெரிதாக இருக்க வேண்டும். இதனை ஒரு வார காலத்தில் அனைத்து வியாபாரிகளும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார். கூட்டத்தில் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் வியாபாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *