கலை பண்பாட்டுத்துறை, மதுரை மண்டல கலை பண்பாட்டு மையம், சார்பாக திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் காளியம்மன் கோவில் திடல் கலையரங்கில் உலக நாடக தினவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் கலைச்சுடர் மணி APR சாமி குழுவினரின் வீரமங்கை வேலு நாச்சியார் வரலாற்று இசை நாடகம் மற்றும் கலை முதுமணி MG. முனியராஜன் குழுவினரின் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் புராண இசை நாடகம் நடைபெற்றது.
இவ்விழாவில் கலை பண்பாட்டுத் துறை துணை இயக்குநர்.கோபால கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். திண்டுக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் நாடக விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். சுற்றுலா துறை அலுவலர் வாழ்த்துரை வழங்கினார். கலை பண்பாட்டுமைய உதவியாளர் நன்றியுரையாற்றினார்.