விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் இந்து மதத்தை இழிவு படுத்தியும் பெண்களை கொச்சைப்படுத்தியும் ஆபாசமாக பேசிய திமுக அமைச்சர் பொன்முடியை பதவி விலகக் கோரி கண்டமங்கலம் ஒன்றிய அதிமுக மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி கலந்துகொண்டு தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் எல். கே .கண்ணன் மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக தலைமை கழக பேச்சாளர் அமுதா கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய மகளிர் அணி செயளாலர் மையிலி அய்யப்பன் மற்றும் தெற்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் கவிதா பாலாஜி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் பொன்முடி க்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.