தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மாவட்ட ஆட்சியர் தகவல் தமிழ்நாடு சீருடை ப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர்கள் தாலுகா மற்றும் ஆயுதப்படை பதவிக்கான 1299 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
இத்தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் www.tnsrub.tn.gov.in
என்ற இனிய தளம் மூலம் 3.05.2025. வரை விண்ணப்பிக்கலாம் இத்தேர்வுக் கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நாளை வியாழக்கிழமை 24.04.2025 அன்று காலை 10 மணிக்கு துவங்கப்பட உள்ளது
இந்த பயிற்சியில் இலவசப் பாட குறிப்புகள் மற்றும் ஒவ்வொரு பாடத்திற்கும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் மேலும் இந்த அலுவலகத்தின் மூலம் நடத்தப்பட்ட இலவச பயிற்சி வகுப்பில் பயின்று தேர்ச்சி பெற்ற 19 நபர்கள் காவல்துறையில் சாவு ஆய்வாளர்களாக தற்போது பணியாற்றி வருகின்றனர்
இத்தேர்வில் அதிகமானவர்கள் தேர்ச்சி பெற செய்வதை இலக்காக கொண்டு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்பு மிக சிறப்பாக நடத்தப்பட உள்ளது எனவே தேனி மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் நேரடி இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன் அடையலாம். இந்த பயிற்சி வகுப்பில் சேர்வது தொடர்பாக தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 6379268661 என்ற செல் நம்பரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். இந்த தகவலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இரா நல்லதம்பி தெரிவித்தார்