கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பாஜக தலைவர் கவியரசு அவர்களின் அறிவுறுத்தலின்படி பாரதிய ஜனதா கட்சி சார்பில் பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டல பாஜக சார்பில் அகரம் கிராமத்தில் காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டல தலைவர். சாமிநாதன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் :
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டணம் கிழக்கு மண்டல் அகரம் கிராமத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வில் ஏராளமான பாஜகவினரும் பொதுமக்களும் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினர்.
ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர் இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது இந்த நிலையில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் பலியான இந்தியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டலத்தின் பாஜக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது
இதில் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டு கைகளில் மெழுகுவத்தி ஏந்தி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர் இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் தருமன், மண்டல செயலாளர் சகாதேவன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரமூர்த்தி, பொதுச் செயலாளர்கள் அகிலன், ஆனந்தராஜ், மாவட்ட ஊடகப்பிரிவு பெரியசாமி, மூத்த நிர்வாகி மாணிக்கவாசகர், வசந்தகோகிலா, மஞ்சுளா, ஜெயகாந்தன், லோகநாதன், முருகன், பெரியண்ணன், கார்த்திகேயன், ஸ்ரீதர், கோபாலகிருஷ்ணன், குமரன், காந்தி, கருணாகரன், கோவிந்தராஜ், சபரிநாதன், குமரேசன், கில்லி என்கிற அனந்தநாராயண உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்