திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்,
ஆளுநரை கண்டித்து திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சட்டமன்ற வழிமுறைகளுக்கு மாறாக தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வரும் ஆளுநர் ரவியை கண்டித்து திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கருப்பு கொடி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல் சாசனத்திற்கு விரோதமாக இன்று நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டுக்கு வருகை தந்த குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய நகர நிர்வாகிகள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்