போக்குவரத்து போலீசார், தூய்மை பணியாளர்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரையிலும் பயன்படுத்தும் விதமாக, வெப் பம் கடத்தாத தொப்பியை மதுரையில் உள்ள சாயிராம் வித்யாலயா பள்ளி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
மதுரை சொக்கிகுளம் பகுதி சாயிராம் வித்யாலயா பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அப்துல் ஹபீஸ், ஆதவன், ஹேம் குமார் மற்றும் தர்ஷன் ஆகியோர் எளிதான அறிவியல் வடிவமைப் புகளை இணைந்து உருவாக்கி வருகின்றனர். இதன்படி தற்போது இவர்கள் நால்வரும் வடிவமைத்துள்ள ‘வெப்பம் கடத்தாத தொப்பி’ ஆச்சரியமளிப்பதாக உள்ளது.
இது குறித்து மாணவர்கள் கூறியதாவது: வெயிலில் நிறுத்தும் டூவீலரில் வெப்பம் ஏறாமல் இருக்க சமீபத்தில் ஒரு நைலான் வலை அறிமுகமானது. இந்த வலையை தொப்பியாக வடிவமைத் துள்ளோம். தலையில் அணியும் இந்த தொப்பி
வெயிலில் நீண்ட நேரம் வேலை செய்யும் போக்குவரத்து போலீசார், தூய்மை பணியாளர் கள் துவங்கி கிரிக்கெட் வீரர்கள் வரை பலருக்கும் பயன் படும். இந்த நைலான் நெட்டில் டபுள் லேயர் இருப்பதால் உள்ளே செல்லும் வெப்பம் உடனடியாக வெளியே வந்து விடும்.
இதனால் தலைப்பகுதியின் குளிர்ச்சி காக்கப்படும். காற்றோட்டம் தந்து, வெப்ப ஊடுருவலை தடுக்கும் அமைப்பு இதில் உள்ளது. குறிப்பாக இன்ப்ராரெட் கதிர்களை குறைத்து , வெப்பம் தலைப்பகுதியில் அதிகம் குவிவதை இந்த தொப்பி தவிர்க்கிறது. இவ்வாறு கூறினர்.
இதுகுறித்து மாணவர்களின் அறிவியல் வழிகாட்டியான ஆசிரியர் அப்துல் ரஜாக் கூறும் போது,’மாணவர்கள் இதேபோல் 30க்கும் அதிக சிறு வடிவமைப்பு களை உருவாக்கியுள்ளனர்’ என்றார்.