நாகப்பட்டினம் மாவட்டம் காக்கழனி கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு தாமோதர விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் 49 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைப்பெற்றது.

கும்பாபிஷேக விழா கடந்த 24 ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, கோ பூஜையுடன் யாகசாலை பூஜைகளுடன் பூர்ணாஹூதி தீபாரதனை நடைப்பெற்று வந்தது.

இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுப்பெற்று பூர்ணாஹூதி தீபாரதனை நடைப்பெற்றது. தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைப்பெற்றது. சிவாச்சாரியர்கள் புனித நீர் அடங்கிய கலசத்தை சுமந்து வந்து வேத மந்திரங்கள் முழங்க ஆலய கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. ஆலயத்தில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷகம் நடைப்பெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்

செய்தியாளர் ஜி. சக்கரவர்த்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *