செய்தியாளர் வெங்கடேசன்

நெமிலியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் பணி நிறைவு பாராட்டு விழா :-
ராணிப்பேட்டை
நெமிலியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் பணி நிறைவு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நெமிலி வட்டாரம் சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் பணி நிறைவு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு வட்டார தலைவர் தினகர் தலைமை வகித்தார்.
மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கோபிநாதன், கிருஷ்ணன், தமிழ்ச்செல்வி கலைச்செல்வி முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் சண்முகம் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சி துவக்க உரை மற்றும் நிகழ்ச்சி தொகுப்புரை மாவட்ட பொருளாளர்
முருகன் வழங்கி பேசினார். முன்னாள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டசெயலாளர் சுந்தரேசன் பேசியதாவது:
இனி வரும் காலங்களில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெறும் அனைத்து போராட்டங்களிலும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டும். பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை கூட்டணி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
விழாவில் மாநில துணை செயலாளர் சரஸ்வதி,மாநில துணைத்தலைவர் தேவராஜன், மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வீரபத்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் வெங்கட்ராமன், மாவட்ட துணை செயலாளர் நியூட்டன் காபிரியேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலாஜி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாலு, ஆசிரியர் பயிற்றுநர் தங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
விழாவில் பெரப்பேரி அரசு நடுநிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பரத்குமார், பல்லாவரம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ராதா, கரியாக்குடல் தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் கலைவாணி ஆகியோருக்கு பணி நிறைவு பாராட்டுவிழா நடைபெற்றது.
விழாவில் அரக்கோணம் வட்டார செயலாளர் சண்முகவடிவேல், வாலாஜா மேற்கு வட்டார செயலாளர் அபித் கிளமெண்ட், திமிரி வட்டார செயலாளர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வட்டார பொருளாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.