காஞ்சிபுரம் அடுத்த, முத்தியால்பேட்டையில், துறவு நிலை பெற்று பல ஆண்டுகள் வாழ்ந்தவர் மலையாளசுவாமிகள். பொட்டிசாமி என்ற பிரம்மானந்த சுவாமியின் சமாதி அடைந்தார். இவரது, 110 ம் ஆண்டு, குருபூஜை விழா, முத்தியால்பேட்டை, பொட்டிசாமி சித்தர் பீடத்தின் சமாதியில் நடந்தன. இதில் சிறப்பு அபிஷேகமும், மஹாதீபாராதனையும் நடந்தது.
மேலும் கிலோ கணக்கில் மல்லி, சாமந்தி, ரோஸ் போன்ற பல்வேறு மலர்களால் சிறப்பு புஷ்பாஞ்சலி செய்து 1008 வேத மந்திரங்கள் ஓதி வழிபாடு,
இதில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது,பின் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்களுக்கும் கோவில் விழா ஏற்பாட்டாளர்கள் சார்பில் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது,