திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேலமேட்டுப்பட்டி பிரிவிலிருந்து செல்லப்பநாயக்கன்பட்டி செல்லும் சாலை ஓரத்தில் மின்சார கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது.
இந்த மின் கம்பம் எப்பொழுது வேண்டுமானாலும் கீழே விழக்கூடிய அபாயமும் உள்ளது.
இதனால் அப்பகுதியில் செல்வோர்கள் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.உடனடியாக மின்சார கம்பத்தை நேராக நிறுத்த வேண்டுமென மின்சார துறையினருக்கு அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.