கோவையில் 10 X ( Ten X) எனும் தோல் அழகு பராமரிப்பு மையம் துவக்கம்
புதிய தோல் அழகு பராமரிப்பு மையத்தை மருத்துவர் பக்தவத்சலம் திறந்து வைத்தார்
தோல் அழகை பராமரிப்பது தொடர்பான விழிப்புணர்வு தற்போது பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறதுn இந்நிலையில் இது தொடர்பான 10 X எனும் தோல் அழகு பராமரிப்பு மையம் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் துவங்கப்பட்டது ..
இதற்கான துவக்க விழாவில் கே.ஜி.மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவத்சலம் கலந்து கொண்டு புதிய தோல் அழகு மையத்தை திறந்து வைத்தார்..
நிகழ்ச்சியில் டென் எக்ஸ் மையத்தின் நிறுவனர் டாக்டர் பத்மபிரியா பேசுகையில்,அதி நவீன லேசர் சிகிச்சை முறையில் தோல் அழகை பராமரிக்க சிகிச்சைகள் மேற்கொள்வதாக கூறிய அவர்,அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகளை கொண்டு மட்டுமே தோல் பராமரிப்பு இங்கு செய்யப்படுவதாக தெரிவித்தார்..
மச்சங்கள், மருக்கள் போன்றவற்றை அகற்றுதல்,முடி அகற்றுதலுக்கான லேசர் சிகிச்சை, ரசாயன உரித்தல் போன்ற தோல் அழகு படுத்துதல் தொடர்பான அனைத்து முறைகளும் இங்கு செய்யப்படுவதாக தெரிவித்தார்..