தென்காசி மாவட்டம் கடையம் அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி கண் முன்னே தொழிலாளி அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம், இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட் டம் வீ.கே.புதூர் அருகே யுள்ள தாயார்தோப்பு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் ஆமோஸ் (வயது 26). கட்டிடத்தொழிலாளி.
இவ ரது மனைவி நந்தினி (வயது 23). இவர்களுக்கு ஹன்சிகா (வயது 2) என்ற மகள் உள்ளார். ஆமோஸ் தனது குடும்பத்துடன் கடையம் அரு கே உள்ள நாலாங்கட்டளை கிராமத்தில் வசித்து வந்தார். ஆமோசிடம் செல்போன் இல்லாததால் அவருடன் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் உறவினர்கள், நந்தினி போனில் பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில் ஆமோஸ் உடன் வேலை பார்த்த முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறை பகுதியைச் சேர்ந்த ஜோசப் ஸ்டீபன் என்பவரது மகன் அந்தோனி டேனிஸ் என்ற டேனி (வயது 35) என்பவர் அடிக்கடி நந்தினி செல்போனில் பேசி வந்துள்ளார். இதில் நந்தினிக்கும், அந்தோனிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதை அறிந்த ஆமோஸ் – நந்தினி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் ஆமோஸ் தொடர்ந்து மதுவிற்கு அடிமையாகி வேலைக்கு ஒழுங்காக செல்லாமல் சுற்றி வந்துள்ளார். மேலும் நந்தினியிடம் அந்தோணி டேனிசுடன் பழகுவதை கைவிடுமாறு ஆமோஸ் பலமுறை எச்சரித்துள்ளார். ஆனாலும் நந்தினி அந்தோணி டேனிஸ் பழக்கம் நீடித்து வந்துள்ளது.
இந்நிலையில் நந்தினியும், அந்தோனி டேனிசும் சேர்ந்து வாழ திட்டமிட்டுள்ளனர். அந்தோனிக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தை கள் உள்ளனர். ஆனாலும் அவர் நந்தினியை தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத் துவதற்கு திட்டமிட்டிருந்தார். இதற்காக நேற்று மதியம் 12 மணியளவில் நந்தினியை அழைத்துச் செல்வதற்காக அந்தோனி தனது பைக்கில் ஆமோஸ் வீட்டிற்கு வந்துள்ளார். ஆமோஸ் வீட்டில் இருந் ததை கவனிக்காத அந்தோனி டேனிஸ் , வீட்டில் இருந்து வெளியே வருமாறு நந்தினியை அழைத்துள்ளார்.
அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த ஆமோஸ், எனது மனைவியை நீ எப்படி கூப்பிடலாம் எனக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது நந்தினி அங்கு வந்துள்ளார். அவரை அந்தோனியுடன் செல்ல விடாமல் ஆமோஸ் தடுக்கவே, ஆத்திரமடைந்த அந்தோனி டேனிஸ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆமோசை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம டைந்த ஆமோஸ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கணவரை கண் முன்னே அரிவாளால் வெட்டியதை பார்த்துக்கொண்டிருந்த நந்தினி அதனை தடுக்காமல் இருந்துள்ளார். ஆமோஸ் அலறல் சத்தம் கேட்டு அக் கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது ஆமோஸ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடி யாக கடையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், ஆமோஸ் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.நந்தினியை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.இதில் தனது ஆண் நண் பர் அந்தோனி டேனிஸ் தனது கணவர் ஆமோஸை வெட்டி விட்டு தப்பியோடியதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அந்தோனி டேனிஸ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அந்தோணி டேனிஸ் மற்றும் நந்தினியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 16ஆம் தேதி தென்காசி அருகே கீழப்புலியூர் பகுதியில் ரேஷன் கடையில் வரிசையில் நின்ற நபரை அவரது மனைவியின் கண்முன்னே சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் தென்காசி மாவட்டத்தில் மனைவி கண்முன்னே கணவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட
சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.