குடவாசல் வட்டார வளமையத்தில் பள்ளி செல்லா மற்றும் மாறுத்திறன் உடைய குழந்தைகளை கண்டறியும் பணிக்கான கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி செல்லா மற்றும் மாறுத்திறன் உடைய குழந்தைகளை கண்டறியும் பணிக்கான கூட்டம் குடவாசல் வட்டார வளமையத்தில் வட்டார கல்வி அலுவலர்கள் குமரேசன், ஜெயலட்சுமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் பூபாலன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், வட்டார ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் காத்தமுத்து, மகேஷ்குமார், சிறப்பாசிரியர்கள் ஏஞ்சலா வைரவேல் ஜெயந்தி திலகவேணி ரஷ்யா மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் தகவல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின் படி 25-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை குடவாசல் வட்டாரத்தில் உள்ள 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் இதுவரை பள்ளியில் சேர்ந்திடாத குழந்தைகளை கள ஆய்வு செய்து கண்டறியும் பணியினை வட்டார கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், தன்னார்வலர்கள், முன்னாள் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து செய்வதற்கு ஏற்ற வகையில் திட்டமிடல் நடைபெற்றது.
இதனையடுத்து இடைநின்ற குழந்தைகள் அனுஷ்கா மகதி ஆகியோர் ஆறாம் வகுப்பிலும், மீனாட்சி பன்னிரண்டாம் வகுப்பிலும், ஹரிஷ்குமார் பதினொன்றாம் வகுப்பிலும் குழந்தைகள் கண்டறியப்பட்டு பள்ளிகளில், தொழிற்கல்வி நிறுவனங்களில் சேர அறிவுரைகள் வழங்கப்பட்டன.