தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420
தாராபுரம் நகர அ.தி.மு.க செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.
திருப்பூர்,தாராபுரம் நகர அ.தி. மு. க அலுவலுகத்தில் நகரக் கழக செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் பழனிகுமார், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் பங்க் பி.மகேஷ்குமார், நகர அவைத்தலைவர் வி. நாட்ராயன்,மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் பா.ரா. அரசகுமாரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டதில் வருகின்ற மே-1 ம் தேதி மே தின பொதுக்கூட்டம் அண்ணா தொழில் சங்கம் சார்பில் சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தமிழகத்தில் மீண்டும் புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் நல்லாட்சி கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்திட பாடுபட வேண்டும்.
வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் தொகுதிக்கு பொதுச் செயலாளர் யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அவரின் வெற்றிக்காக நாம் அனைவரும் அயராது பாடுபட்டு அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.வருகின்ற மே.1ந்தேதி நடைபெறவுள்ள மே தினவிழாவை தாராபுரம் மின்சாரவாரிய அலுவலகத்திலும், தாராபுரம் போக்குவரத்து கிளை பணி மனை வளாகத்திலும் கொடியேற்றி சிறப்பிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட அண்ணா தொழில் சங்க இணை செயலாளர் சிதம்பரம், மாவட்ட அண்ணா தொழிற் சங்க துணை செயலாளர் ரவி என்கிற ராம்மோகன் மற்றும் போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற் சங்கம், மின்சார பிரிவு அண்ணா தொழிற் சங்கம், அண்ணா ஆட்டோ ஓட்டுநர் சங்கம், அண்ணா பேக்கரி தொழிலாளர் சங்கம், அண்ணா சுமைதூக்குவோர் தொழிலாளர் சங்கம் உட்பட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.