கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த தேனி எம்பி தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய நகரான கூடலூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரடியாக தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி ஆய்வு செய்தார்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள டாக்டர்களிடம் சுகாதார நிலையத்திற்கு வருகை புரியும் நோயாளிகளின் வருகை பதிவேடு மற்றும் அந்த சுகாதார நிலையத்துக்கு என்னென்ன மருத்துவ உபகரணங்கள் என்ன என்ன தேவை என்பதையும் கேட்டறிந்த தேனி எம்பி தங்க தமிழ்ச் செல்வன் அங்கு வரும் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்
மேலும் அந்த சுகாதார நிலையத்தில் உள்ள பிரசவ வார்டில் சென்று அங்குள்ள தாய்மார்களிடம் அவர்களின் குறைகளை கேட்டு தமிழக முதல்வரின் பிரசவ கால தாய்மார்களுக்கு வழங்கப்படும் பிரசவ காலப் பெட்டகங்களை வழங்கினார்.
மேலும் அந்த மருத்துவமனையில் சேகாரமாகும் மருத்துவ கழிவுகளை அளிப்பதற்கான வழிமுறைகளையும் கேட்டறிந்து அதற்கு தக்க ஆலோசனைகளையும் வழங்கினார். இந்த நிகழ்வில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மற்றும் டாக்டர்கள செவிலியர்கள் துணிந்து நில் அறக்கட்டளை மாவட்ட தலைவர் டாக்டர் எம். வேல்பாண்டியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.