தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420
தாராபுரம்:அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி
கொளத்துப்பாளையம் பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்!…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்.அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம் அருகே உள்ளது கொளத்துப்பாளையம் பேரூராட்சி. மொத்தம் 11 வார்டுகளை உள்ளடக்கிய இப்பேரூராட்சியின் கவுன்சிலர் கூட்டம் பேரூராட்சி தலைவர் சுதா கருப்புசாமி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் துரைசாமி முன்னிலை வகித்தார்.
கூட்டம் தொடங்கியதும் 14-வது வார்டு உறுப்பினர் கார்த்திகேயன், 12- வது வார்டு உறுப்பினர் தனலட்சுமி ஆகியோர் தங்கள் இருக்கையை விட்டு எழுந்து வந்து நரையில் அமர்ந்து 12 மற்றும் 14- வது வார்டுகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி, தெருவி எக்கு உள்ளிட்டவைகளை கடந்த ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் பேரூராட்சி நிர்வாகம் செய்து தரநடவடிக்கை எடுக்கவில்லை. எனத தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களுக்கு வினினயோகிக்கப்படும் குடிநீர் பிரதான குழாயின் கேட்வாழ்வுகளை சங்கிலியால் கட்டி பூட்டு போட்டு பூட்டி வைத்து பொதுமக்களுக்கு தங்கு தடையற்ற தண்ணீர் கிடைப்பதை தடை செய்து வருகின்றனர்.
குடிநீர் வினியோகத்தை உரிய நேரத்தில் வழங்குவதற்கு பேரூராட்சி நிரவாகத்தால் நியமிக்கப்பட்ட ஊழியர் தனது கடமையை சரிவர செய்வதில்லை.
பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் வரை தர்னா போராட்டத்தில் ஈடுபடுவதுடன் தொடர் காத்திருப்பு போராட்டத்திலும் இருக்கப் போவதாக கொளத்துப்பாளையம் பேரூராட்சி அலுவலகத்திற்குள தரையில் அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயசாரதி. சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் உள்ளிட்ட காவல்துறையினர் அடங்கிய குழுவினர் பேரூராட்சி அலுவலகத்திற்கு நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கு உடன்பட மறுத்த பொதுமக்கள் பலமுறை இப் பிரச்சினைகளுக்காக தாங்கள் போராட்டம் நடத்தியும் தீர்வு காணப்படவில்லை.
எனவே பேரூராட்சி தலைவர் துணைத் தலைவர் செயல் அலுவலர் ஆகியோர் நேரில் வந்து தங்கள் முன் உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம்
என கூறினர்.
இதன்பின் பேரூராட்சியின் செயல் அலுவலர் நாகராஜன், பெரூராட்சி தலைவர் சுதா கருப்புசாமி ஆகியோர் தலைமையில் முத்தரப்பு பேச்சு யார்த்தை நடைபெற்
இதில் 10 நாட்களுக்குள். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
பேச்சுவார்த்தையில் முடியில் 12 மற்றும் 14-வது வார்டு பொதுமக்கள் கவுன்சிலர்களின் கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டரிடமும் தமிழ்நாடு அரசிடமும் ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அரசு நிதி ஒதுக்கீடு செய்தவுடன் இந்த பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படும் என கூறினர்.
இதையடுத்து பேச்சுவாரத்தையில் கூறியபடி 10 நாட்களுக்குள் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பேரூராட்சி அலுவலகத்திற்கு முன் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவந்தால் கொளந்துப்பாளையம் பேரூராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது.